திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் சுமார் 30 பேர் இலங்கை அரசின் ஏற்பாட்டில் நல்லெண்ண பயணம் என்ற பேரில் வள்ளியப்பன் தலைமையில் நாளை 10.02.2011 முதல் 14.02.2011 வரையில் இலங்கை அரசின் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக மீனவர்களையும், லட்சக்கணக்கான தமிழர்களையும் இனப்படுகொலை செய்த நாட்டுக்கு சிங்கள கைக்கூலிகளாக செல்லும், மக்களுக்கு சேவை ஆற்றுவதாக கூறி கொள்ளும் திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி சங்கத்தின் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக, புதிய தமிழகம் கட்சி, பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர். இலங்கை இனப்படுகொலை செய்த நாடு அங்கு போகவேண்டாம் என்று கோரிக்கை மனு ஓன்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்.இரா.பிரபு, மதிமுக வழக்கறிஞர்.கங்கைசெல்வன், புதிய தமிழகம் கோ.சங்கர், பெரியார் திராவிட கழக குமார் ஆகியோரால் ரோட்டரி சங்கத்தின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
அலுவலகத்தின் வாயிலில் உட்கார்ந்து சுமார் 20 நிமிட ஆர்பாட்டத்தின் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு உறையூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுவிடுவிக்கப்பட்டனர்.