22.01.11 மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.

13

வருகின்ற 22.01.11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு KGS திருமண மண்டபம், சந்தை கோடியூர் சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனை விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெறயுள்ளது. இந் நிகழ்ச்சி உலக தமிழர்களின் பார்வைக்கு நாம் தமிழர் இணையதளத்தின் வலைத்திரை பக்கத்தில் (www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.
சிறப்புரையாற்றுவோர் :

செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.

கொளத்தூர் த.செ.மணி, தலைவர் பெரியார் திராவிடர் கழகம்.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்கட்சி.

பேராசிரியர் சரசுவதி, தலைவர், பெண்கள் முன்னணி.

வழக்கறிஞர் தடா சந்திரசேகர்.

வழக்கறிஞர் பிரிட்டோ, மனித உரிமை ஆர்வலர்.