வீரத்தமிழன் முத்துகுமார் அவர்கின் நினைவு நாளையொட்டி நெல்லை நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அஞ்சலி மற்றும் பிரச்சாரம்.

42

29.01.2011 இன்று மாவீரன் முத்துகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞ்சர் வ.மணிகண்டன் தலைமையில் நெல்லை பாலை சந்தை,வண்ணார்பேட்டை சந்திப்பு, தொடர் வண்டி நிலையம்,நெல்லை நகரம், பேட்டை,நீதி மன்றம் உள்ளிட்ட இடங்களில் தமிழர்களின் உரிமைக்கு தன் உயிரை தந்த மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது இதில் மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் பேச்சிமுத்து,கங்கை,இரா.புவனேந்திரன்,வழக்கறிஞர் கருணாநிதி,இசைவேந்தன் முத்துராஜ் உள்ளிட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள்,பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

,