மொழி போர் தியாகிகளுக்கு… வீர வணக்கம்…

251

மொழி போர் தியாகிகளுக்கு… வீர வணக்கம்…


1965… சனவரி 25… தமிழ் மொழி போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள்…

அறிஞர் அண்ணா… இந்தி திணிப்பை எதிர்த்து… இந்திய குடியரசு தினத்தை புறகணித்து… அனைவரும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என கேட்டு கொண்ட நாள்… இதனால் அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன் போன்ற திமுக முன்னனி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்…

தமிழ நாட்டை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்… இந்த போராட்டதிற்கு தலைவராக… சென்னை சட்ட கல்லூரி மாணவர் ரவி சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்… எல்.கணேசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ம.நடராசன் போன்றவர்கள்… இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்…

சனவரி 26…

சென்னையை சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவசலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது… லால் பகதூர் சாஸ்தரி அரசின் துனை ராணுவ படை மாணவர்களை தாக்கியதில்… மாணவர்கள்… கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்…

மதுரை வடக்கு மாசி வீதியில் ந.காமராசன்… கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய போது… அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.சேஷன், காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து பால் கூட்டணி… மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு… என அனைத்து வெறியாட்டங்களையும்
நடத்தி பல மாணவர்களை கொலை செய்து முடித்தது…

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 100 மாணவர்களுக்கும் மேல்… லால் பகதூர் சாஸ்தரி தலைமையில் இருந்த இந்திய அரசு மற்றும் பக்தவசலம் தலைமையில் இருந்த சென்னை மெட்ராஸ் ஸ்டேட் அரசால் கொல்லப்பட்டனர்…

இந்த போராட்டத்தில் தமிழக மாணவர்கள்… இங்கிருந்த எல்லா சிறைகளை நிறைத்து இருந்தனர்…

காங்கிரஸின் அடக்கு முறை… தமிழுக்காக பேசிய அனைவரை உள்ளே போட்டது… தமிழுக்காக பேரணி நடத்திய சைவ சமய தலைவர் குன்றகுடி திருவ்ண்ணாமலை ஆதினம் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்… மொழிக்காக போராடி சிறை சென்ற… ஒரே சமய தலைவர் குன்றகுடி ஆதினமாக மட்டுமே இருப்பார்…

இந்தியப் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டோரைத் தவிர சின்னசாமி, முத்து, ரங்கநாதன், சாரங்கபாணி, சிவலிங்கம் மற்றும் வீரப்பன் ஆகியோர் தமக்குத் தாமே நெருப்பூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராகத் தற்கொலை செய்து தம் இன்னுயிரை நீத்தனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கான காரணம் இன்னும் எவ்வளவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்வி குறியே… ஏதோ இந்த போராட்டம் திமுகவின் போராட்டம் போல் நிறைய புத்திசாலிகள் நினைத்து கொண்டுள்ள்னர்…

உண்மையான காரணம்…


1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு சட்டம் கொண்டு வரப்பட்ட போது… 15 ஆண்டுகளில்… மக்கள் அதிகமாக பேசும் இந்தியை இந்தியா முழுவதும் அலுவல் மொழியாக்கி விட வேண்டும்… என ஜவகர்லால் மற்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது…

அதாவது… இந்திய அரசு… மற்ற ஸ்டேட் அரசு நிர்வாகங்களில் ஆங்கிலம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்… ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை கொண்டு வருவது என்பது திட்டம்… இந்த திட்டத்தை முதலில் எதிர்த்தவரகள் மேற்கு வங்கத்தினர்… பின்னர் மானமுள்ள (மானமே இல்லாத காங்கிரஸ்காரர்கள் இந்த திட்டத்தை ஏற்று கொண்டவர்கள்) தமிழர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தனர்…

1963 இல் அறிஞர் அண்ணா… நாடாளுமன்ற மாநிலங்கள் அவை இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்…

அதிகமானவர்கள் பேசும் மொழியை குறைவானவர்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும்? அப்படி என்றால் குறைவானவர்கள் பேசும் மொழி என்னவாகும்?

அதிகமானவர்கள் பேசும் மொழி மட்டுமே அலுவல் மொழி என்றால்… அதிகமாக இருக்கும் காகத்தை விட்டு… ஏன் மயிலை தேசிய பறவையாகவும்… அதிகமாக இருக்கும் எலியை விட்டு… ஏன் புலியை தேசிய விலங்காகவும் அறிவிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்…

வங்கத்தவர் மற்றும் தமிழர்களின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதித்து விட்டு… 1965 சனவரி 26 இல் இருந்து இந்தி மட்டுமே… இந்தியாவில் இயங்க முடியும் எனும் அதிகார சட்டதிற்கு… காங்கிரஸ் குறியாக காய் நகர்த்தியது…

காங்கிரஸ் மோசடியாக… வல்லமை ஆதிக்கத்தின் மூலம்… சிறுபான்மை மக்கள் பேசும்… மொழிகளை… அழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டில் வெடித்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம்…

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பயன்… மானமே இல்லாத காங்கரஸ்கார அடிமைகளின் கோர முகம் தெரிந்து… தமிழ் நாட்டில் காங்கிரஸ் எனும் ஒன்று… ஊனமாக்கப்பட்டு முடமாகி விட்டது… அதனால்தான் முடிமாகி போன மெட்ராஸ் ஸ்டேட் காங்கிரஸ்… சிங்கள ராஜபக்சே, இத்தாலிய சோனியா, பார்ப்பன ஜெ… போன்ற பாசிசவாதிகளுக்கு அடிமையாக இருக்கிறது….

இந்திய அரசு என சொல்லி கொள்ளும் ஆதிக்க சக்திகள் மற்றும் அடிமைகளின் அதிகார வட்டம்… என்றும… தமிழின் விரோத அமைப்பாக இயங்கும் நிலையில்…

தமிழனுக்கு குடியரசு நாள் என்பது கருப்பு நாளாகவே இருக்கும்…

இந்த நாளை குடியரசு நாள் என்பதற்கு பதில் அடிமை நாள் என்றே அழைக்கலாம்… இந்த நாளில் கொடியேற்றும் பாசிசவாதிகளுக்கு குடியரசு என்றால் புரியாது… அவர்களுக்கு தேவை அடிமை நாய்கள்…

இன்று தமிழ் நாட்டிலும்… மற்ற வங்கம் போன்ற சிறுபான்மை மொழிகள்… அந்தந்த மாநிலங்களில் அலுவல் மொழியாக இருக்க முடிகிறது என்றால்… மக்கள் கொடுத்த விலை…

சில நூறு தமிழர்களின் உயிர்கள்…
லால் பகதூர் சாஸ்திரி படைகளால் ஊனம் ஆக்கப்பட்ட தமிழர்கள் 500 பேருக்கு மேல் இருப்பார்கள்…

அடங்கி போ… அண்டி வாழ், அடிமை நாயாக செத்து மடி எனும் ஆதிக்கம் செலுத்த வந்த இந்திய வல்லாண்மையை எதிர்த்து குரல் கொடுத்து…

உயிர் நீத்த தமிழ் உணர்வாளர்களும்… லால் பகதூர் சாஸ்திரி அனுப்பிய படையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும்…வீர வணக்கம்…