புதுக்கோட்டை மாவட்டம், செகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் நேற்று சிங்கள இன வெறி இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்காக அனைத்திந்திய வானொலி நிலையம் முன்பு அனுமதி கோரியபோது அது மறுக்கப்பட்டு தொடர்வண்டி நிலையம் எதிரில் அனுமதி வழங்கினர். அதன் பின் இன்று 13-1-2010 மாலை 4.30 மணியளவில் தொடர்வண்டி நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதில் சிங்களன் என்ன பங்காளியா! தமிழன் என்ன பகையாளியா! என முழக்கமிட்டனர்.