[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.

20

“வீரத் தமிழ்மகன்” முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப் பயணம் 28-1-2011 அன்று கடலூர் வந்தடைந்தது. நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.தீபன் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை நிறுத்தம் வேண்டி தீக்குளித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவல்லி ‘ஆனந்தன்’ மற்றும் வண்டிப்பாலயத்தைச் சேர்ந்த ‘தமிழ்வேந்தன்’ ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தி நிதி உதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடலூர் பேருந்து நிலையம் அருகில் “வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு” வீரவணக்க  கூட்டம் நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.