[படங்கள் இணைப்பு]திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

100

திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

17-1-2011 அன்று திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. ராயகிரி பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார், ராயகிரி பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு,குருசேகரன் தலைமை தாங்க,பழனிக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார்,திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கரிகாலன்,இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் மணி,நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுகூட்டத்திற்கு சிறப்பு  அழைப்பாளராக பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்துகொண்டார்.தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இப்பொதுகூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஅமெரிக்கா வந்துள்ள போர் குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.