நாம் தமிழர் கட்சியின் முயற்சியையடுத்து தந்தை பெரியாரின் நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.

21

இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கையால் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுஇராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் மற்றும் தோழர்களின் இடை விடா முயற்சியால் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த பல மாதங்களாக அரசுக்கு வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக கடந்த 27.12.10  அன்று இராமநாதபுரத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் அகற்றுவோம் என்று அரசுக்கு விடுத்த அறிக்கையை ஏற்று உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

.9786960608, 9698016010