சீமானின் இன்றைய நிகழ்ச்சி நிரல் :
இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
மதியம் நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவர் கிராமத்திற்கு சென்று சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட செல்லப்பன்,ஜெயக்குமார் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்த உள்ளார். இதனையடுத்து வெள்ளப்பள்ளம் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளிக்க உள்ளார்.
இதனையடுத்து பொய்யூர் செல்லும் செந்தமிழன் சீமான் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி முத்துக்குமார் அவர்களை பற்றிய பரப்புரையில் ஈடுபடுகிறார்.