தமிழக மீனவர் பாண்டியன் படுகொலையை கண்டித்து சத்யமூர்த்தி பவன் முன்பு மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.

29

சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பாண்டியன் அவர்களின் மறைவிற்கு காரணமான காங்கிரஸ் யிற்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை சென்னை காங்கிரஸ் அலுவலகம் சத்யமூர்த்தி பவன் முன்பு மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஐம்பதற்க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர், இதில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த கல்பாக்கம் சதீசு என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இச் செய்தி அறிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆவல் கணேசன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி, வழக்றிஞர் பாலாஜி, ஆனந்த ராசு உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.   கைது செய்யப்பட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட பின்பு காவல் நிலையம் முன்பு மீனவர்களின் கைதை கண்டித்து ம.தி.மு.க வை சேர்ந்த மல்லை சத்யா அவர்கள் கண்டன உரையாற்றினர்.

முந்தைய செய்தி15,17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் விளையாட்டு நடைபெறவுள்ளது.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.