தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி .

10

இன்று மதுரையில் தமிழக மீனவர் ஜெயகுமார் அவர்கள் சிங்கள இனவெறி கடற்படையால் சுருக்கிட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் அவரை ஓட்டவிடாமல் சுவரொட்டியை பிடித்து கிழித்து எறிந்தார் காந்தியை அரிவாளில் வெட்ட ஆனையூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கருப்பையா முயன்றார்.  தன்னை தற்காத்து கொள்ள திருப்பி தாக்கிய போது கருப்பையாவின் மண்டை உடைந்தது. இதை அடுத்து அரிவாளில் வெட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யாமல் தனை தற்காத்து கொள்ள முயன்ற நாம் தமிழர் கட்சியியை சேர்ந்த காந்தி அவர்களை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து பேச்சுரிமைக்க்கும் கருத்துரிமைக்கும் தடை விதித்து பொய் வழக்கு போட்டு தங்களது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள் தற்போது ஆயுதத்தையும் கையில் எடுத்து எம்மக்களை ஒடுக்க நினைகிறது. காங்கிரஸ் கட்சியின் இவ்வெறி செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.