தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்ட 100 மீனவ பெண்கள் கைது

20

சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 100 பெண்களைப் காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள் போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.இதை கண்டிக்காமல், தமிழர் விரோதப்போக்கை கடைபிடித்து கொண்டு தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அவரது சென்னை வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் படையெடுத்து வந்தனர்.  மீனவ மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திரகுமாரி,நாம் தமிழர் கட்சி சார்பாக அமுதாநம்பி ஆகியோ கலந்துகொண்டனர்.இருப்பினும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர், மீனவப் பெண்கள், ப.சிதம்பரம் வீட்டை நெருங்குவதற்கு முன்பே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.