சீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

93

“எழும்பூரில் உள்ள புத்த சங்கத்தை அடித்ததில் கூட உளவுத்துறை போலீஸுக்கு பங்கு இருக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது…’’

‘‘அப்படி செய்வதால் அவர்களுக்கென்ன லாபம்…?’’

‘‘தமிழ் உணர்வாளர்களின் வாக்குகள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே விழுந்துள்ளது. இப்போது சீமான் போன்றவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் இந்த முறை தேர்தலின்போது தமிழ் உணர்வாளர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க. பக்கம் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த நாடகம்…’’

‘‘புரியலையே…’’

‘‘இந்தத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று சீமான் பேசி வருகிறார். இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து புத்த மத சங்கம் தாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீமான், ‘எங்கள் மீனவர்களைக் கொன்றால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இங்கே இருக்கும் உங்கள் நாட்டினரை தாக்குவோம்’என்று சொன்னார். இதற்காகத்தானே அவரை என்.எஸ்.ஏ.வில் சிறையில் அடைத்தார்கள். இப்போது புத்த மத சங்கத்தைத் தாக்கிய விவகாரத்தை சீமான் இயக்கம் மீது போட்டால் அவர்கள் அடக்கி வாசிக்க ஆரம்பிப்பார்கள் என்று உளவுத்துறை கணக்குப் போட்டது.ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவனின் போராட்ட குணம் மாறவே இல்லை என்று காட்டி அவர் பின்னால் தமிழ் உணர்வாளர்களைச் செல்ல வைக்கவே அவரை தேசியக் கொடி எரிக்கச் சொன்னார்களாம்…’’

‘‘இப்படியெல்லாமா யோசிப்பார்கள்…’’

‘‘பெண் கவிஞர் ஒருவரை வைத்து, சீமானுக்குத் திறந்த மடல் எழுதி, ‘அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கச் சொல்வதா?’ என்று கேள்வி எழுப்பி மீடியாக்களுக்குக் கொடுத்து சீமானின் இமேஜை உடைக்கவும் உளவுத்துறை தீவிரமாக இருக்கிறதாம்.’’

– நன்றி : வம்பானந்தா பகுதியில் குமுதம் ரிப்போர்ட்டர்.

முந்தைய செய்தி“சீமானை நெருங்கும் கொலையாளிகள்” – தமிழக அரசியல் இதழில் வெளிவந்துள்ள செய்தி
அடுத்த செய்திமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011