இனியும் என்ன செய்ய போகிறோம் ! – பகலவன்

32
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
சக தமிழன் மாண்டதை
வேடிக்கை பார்த்த இனமாகி போனோம் !
பிரித்தானிய ஒற்றுமையையும்
தமிழ்நாட்டில் சாகடித்த இனமாகி போனோம்!

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
ஓட்டு பொறுக்கிகளின்
காலிலும் விழுந்து விட்டோம்!
ஊழல் மன்னர்களின்
ஆட்சியையும் கண்டு விட்டோம் !

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
இருந்த கொஞ்சம் மொழி உணர்வும்
சொரணை அற்று போனது!
பிறந்த குழந்தையும் ஆங்கிலத்தின்
சுவை கண்டு விட்டது!

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
வஞ்சகம் தலைவிரித்தாட
நஞ்சையும் புஞ்சையும் காய்ந்தாட
ஓட்டு பொறுக்கிகள்
தமிழனின் உணர்வையும் உடமைகளயும் சூறையாட
இனியும் மிஞ்சி இருப்பது
உணர்வாளன் என்னும் கோமணம் மட்டுமே!

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
பாலாற்றில் மணலும் இல்லை,
தட்டி கேட்க நாதியும் இல்லை,
முல்லை பெரியாற்றில் மானமும் இல்லை,
தட்டி கேட்க சொரணையும் இல்லை!

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
பிஞ்சுகளின் இதயத்தை அமில குண்டுகள் சூறையாட
வஞ்சகங்கள் நம் இனத்தை கிழித்து பார்த்து விட்டது!
இலவசங்கள் நம் கண்ணை மறைத்தது
ஊமை விழிகளும் கண் கலங்க மறுத்தது
தமிழக மினவன் குருதியை
பரிசாக கொடுக்கிறது இல்லாத இறையாண்மை!

இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
இன்னுமா புரியவில்லை
புலியாய் வாழ்ந்த தமிழனமே!
இதோ தமிழனுக்கான இன்னொரு வாய்ப்பு!

இணைந்தெழு புதிதாய் பிறந்தெழு!
பகைவனை ஓங்கி அடிக்க உயர்வாய் எழு,
வஞ்சகனை அரசியல் சாட்டையால் அடிக்க விழித்தெழு!
இனமாய் எழு,இனத்தின் ஒற்றுமையே உறுதி என எழு!

தமிழனின் குருதியில் பங்கு போட்டவன்
வோட்டு கேட்க வருவான் .
பணிவாய் பேசாதே புயலாய் பாய்ந்தெழு!
சிறுத்தையாய் எழு சீண்டி பார்த்தவனை சிதைக்க எழு!
வீரமாய் எழு,விவேகம் கொண்டவனாய் எழு!
தனமானமாய் எழு, தன இனத்தின் மானமே பெரிது என எழு!

தமிழின விரோதியின் மணிமகுடத்தை
பிடுங்கி எரிய புலியாய் எழு !
இன விரோதியை துண்டாட எழு !
இனமும் மொழியும் உயிர் என பொங்கிஎழு!
என்றும் நமக்கான நாடு உண்டு என்று சிலிர்த்தெழு !

கோழையாய் இருந்து
அடிமையாய் வாழ்ந்தது போதும்!
ஒற்றுமையாய் இருந்து
அடிமை சங்கலியை உடைத்தெறிவோம்!

அண்ணன் முத்துகுமாருக்கு என வீரவணக்கத்தை தெருவித்து கொண்டு
விடைபெறுகிறேன்……….

நன்றியுடன்
பகலவன்

முந்தைய செய்திஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!
அடுத்த செய்திஅறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்