போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !

21
இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
நேற்று மதியம் இலங்கை சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட ஏழு போ் கொண்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை போர் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை போர் குற்றவாளி ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜபக்ஷவை சந்தித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக சிங்கள அரசுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவையும் அவனது சகோதரர்களையும் போர் குற்றவாளிகளாக டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்து இருக்கிறது. சர்வதேசம் முழுதும் பல்வேறு நாடுகள் இலங்கையின் மீது ஐ.நா போர்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என அறிவித்து வருகிறது. ஐ.நா நிபுணர் ஆலோசனை குழுவை நியமித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மட்டும் இலங்கையில் ஏதும் நடக்காதது போலவும், இலங்கை ஒரு சொர்க்க பூமி போலவும், போற்குற்றவாளிகளை பரிசுத்தமானவர்கள் போலும் உலகத்திற்கு காட்ட தொடர்ந்து அரும்பாடுபட்டு வருகிறது. இதுவரை வெளியான போர்குற்ற ஆவண காணொளிகள் குறித்து இந்திய அரசோ கருணாநிதியோ வாய் திறந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திபெரியார் நினைவு நாளை முன்னிட்டு ராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.
அடுத்த செய்திதெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ? – ஈரோடை நாம் தமிழர்