[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

592

தாராபுரம் நாம் தமிழர் சார்பாக பெரியார் நினைவு நாள்  முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதை அடுத்து தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவு நூல்களையும், ஈழம் நினைஎழுச்சி நாள் மற்றும் துயர நாள் குறிப்பு அட்டை பொதுமக்களிடம் இலவசமாக வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

வு எழுச்சி நாள் மற்றும் துயர நாள் குறிப்பு அட்டை பொதுமக்களிடம் இலவசமாக வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

அதை அடுத்து, நாம் தமிழரின் சார்பில்  வீர தமிழ்மகன் அப்துல் ரவூப் நினைவு குருதிக்கொடை மன்றம் துவக்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவ மனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தமிழர் ஒருவருக்கு குருதி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. தமிழர். தமிழ் சாதிக் AB+ என்னும் அரிய   குருதிவகையை வழங்கினார்.  இந்நிகழ்வில் சேனாபதி, ராசு, வெள்ளகோவில் கோபால் , தமிழ் ஈழ செல்வன், அழகப்பன், நாகராசு, கண்ணன், அரவிந்தகுமார், தாஸ், கமல், கெளதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.
அடுத்த செய்திஎம்.ஜி.ஆர்,பெரியார் நினைவு நாள் 24-12-2010