தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் – வலைகளை அறுத்து விரட்டியடிப்பு.

15
தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படைக் காடையர்கள் மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து உதைத்தும், படகுகளை சேதப்படுத்தியும் அனுப்பியுள்ளது சிங்கள வெறிப்படை.
685 படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சிங்களப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் படகுகளையும் சேதப்படுத்தி விட்டு எச்சரிக்கை விடுத்து திரும்பிச் சென்றனர்.போகும்போது மீனவர்கள் வைத்திதருந்த மீன் பிடி வலை, செல்போன்களையும் சிங்கள காடையர் கூட்டம் பறித்துச் சென்றது