செந்தமிழன் சீமான் வேலூரில் இருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்.

40

செந்தமிழன் சீமான் அவர்கள் வேலூர் சிறைச்சாலைக்குள் இருந்து வெளிவந்த பின் அவரை வரவேற்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு எழுச்சியுரையாற்றினர். பின் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். செந்தமிழன் சீமான் அவர்களின் வாகனத்திற்கு முன்பும் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான வாகனத்தில் நாம் தமிழர் செயல்வீரர்கள் எழுட்சி முழக்கம் இட்டபடியே பின்தொடர்கின்றனர். சீமான் அவர்கள் சென்னை வந்தடைந்தவுடன் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் ஈடு பட உள்ளார் .