சிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்

26

இலங்கையின் தேசியக்கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசியக்கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு – கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது.லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற சிங்கள அதிபர் ராஜபக்சே வேறு எந்த நாட்டிலும் தேசியக்கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசியக்கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை ஒரேநாடு என்ற அடிப்படையில் தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சேவின் இந்த கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச தமது ஆதரவை வெளியிட்டார். எனினும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டனர்.

இந்த முடிவின் போது இலங்கையின் அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா உட்பட்டவர்கள் தங்களது பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காக அமைதியாகவே இருந்தனர்.

இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இலங்கை, இன முரண்பாட்டிளிருந்து விலகி நல்லிணக்க பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள் உரிமை கழகம்.
அடுத்த செய்திதமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை