கர்ஜித்த கருப்பு கொடி; ஹோட்டலில் பதுங்கிய இலங்கை அமைச்சர்.. லண்டனைத் தொடரும் பெங்களூரு..!

23

‘ஒரு இனத்தையே ஊனமுற்றதாகவும், உடல், மன நோயாளியாகவும் மாற்றிய சிங்கள பேரினவாத அரசின் அமைச்சரை உடனே வெளியேற்று! தமிழினத்தின் எதிரியை விருந்தாளியாக வரவேற்கும் இந்தியா ஒழிக! எங்கள் இனத்தை அழித்துவிட்டு, எந்த துணிச்சலில் இங்கு வந்தாய் சிங்கள ஓநாயே…’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினர்.

மேலும் ராஜபக்ஷே, சலிண்டே டிஸ்சநாயகேவின் உருவ பொம்மைகளை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தினர். இந்த உணர்வலைகளால் பெங்களூரு மீடியாக்கள் அதிர்ந்தன. தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தையும், உருவ பொம்மை எரிப்பையும், செருப்படிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதை தொலைக்காட்சியில் பார்த்த சலிண்டே டிஸ்சநாயகே, ‘பாதுகாப்பு திருப்தி இல்லை’ என்று காரணம் சொல்லிவிட்டு ஓட்டலிலேயே பதுங்கி விட்டார்.

ஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து வந்திருந்த 120 பங்கேற்பாளர்களுக்கும் கண்டி மாகாண அமைச்சர் சுனில் கே.அமரதுங்காவுக்கும் தீவிர பாதுகாப்பு கொடுத்து மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தனர்.

ஆனால், ‘அமரதுங்காவை வெளியேற்று…’ என்று போராட்டம் திசைமாறியது. அதனால் மேடையில் ஏறப்போன கண்டி மாகாண அமைச்சர் சுனில் கே.அமரதுங்கா பாதுகாப்பு நலன் கருதி கீழே இறக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார்.

அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோரை போலீஸ் வேனில் ஏற்றி வழக்கு பதிவு செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்து காவல்துறை.

இது குறித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசனிடம் பேசியபோது, “தமிழினத்தையே கொன்றொழித்த கொலைகார கூட்டத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து இந்தியா விருந்தாளியாக வரவேற்பதை எந்த தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனி எந்த சிங்களவனும் பல்லிளித்தபடி, தமிழன் வாழும் மண்ணில் கால் வைத்தால்… அவ்ளோதான்!” என்று சீற்றத்தோட முறைத்தார்.

– இரா.வினோத்