உறுதிமொழி

நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளைத் தொடங்கும் முன் தவறாமல் மேற்கொள்ளவேண்டிய அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி

Download MP3 https://drive.google.com/drive/folders/0Bxc2BS79sTuCOXZMcnFoUW0zZjg?usp=sharing

அ.அகவணக்கம்

தாயக விடுதலைக்காக, உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.

ஆ.வீரவணக்கம்

நம் மொழி காக்க, இனம் காக்க
நம் மண் காக்க, மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்!

இ.உறுதிமொழி

மொழியாகி, எங்கள் மூச்சாகி,
முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி!
வழிகாட்டி, எம்மை உருவாக்கும்
தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!
விழிமூடித் துயில்கின்ற
வீரவேங்கைகள் மீதும் உறுதி
இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்!
உறுதி! உறுதி!
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை!
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!
வென்றாக வேண்டும் தமிழ்!
ஒன்றாக வேண்டும் தமிழர்!
தமிழால் இணைந்து
நாம் தமிழராய் நிமிர்வோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!

கொடிப்பாடல்:

நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று தலைநிமிர்ந்து
பறக்குது புலிக்கொடி

நாற்றிசை உலகும் போற்றி மெய்சிலிர்க்கத்
தழைக்குது தமிழ்க்குடி

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

மானமுயிர் மூச்சாய்
வீரம் புயல் வீச்சாய்
வாழும் தமிழ் மாந்தர் குலக்கொடி
தேனினும் இனிய தமிழ் மொழியும்
தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி

சோழன் கடற்படைக் கப்பல்கொடி
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி (சோழன்)
கொடுமை ஆயிரம்? குமுறல் ஆயிரம்
அடிமைநிலை வாழ்வில் இனியுமா?

படைகள் ஆயிரம், தடைகள் ஆயிரம் – படினும்
எங்கள் மண் படியுமா?

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

புலிக்கொடி வணங்கி நாம் துடித்தெழுவோம்!
புயலாய், நெருப்பாய் வெடித்தெழுவோம்!

அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழிக்கான செந்தமிழன் சீமானின் குரல் ஒலிப்பதிவு. கீழேயுள்ள இணைப்புகளை சொடுக்கி கோப்பினை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

Download MP3 NTK Songs

https://drive.google.com/drive/folders/0Bxc2BS79sTuCOXZMcnFoUW0zZjg?usp=sharing