நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சாக்கோட்டை தொகுதித் துணைத்தலைவர் அன்புத்தம்பி இரா.இராமசந்திரன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா சேஷம்பாடி இராஜா (எ) இராஜாராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி இராமசந்திரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சேஷம்பாடி இராஜாராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


