இன விடுதலை
அரசியல் களத்தில்
இடையறாது
இன்முகத்தோடு
இயங்கும் பேரன்பன்!
என் தோளுக்குத்
துணையாய் நின்று
என் பணியை
தன் பணியாய் நினைத்து
உழைக்கும் என்
உள்ளத்துத் துணையன்!
தன்னை முன்நிறுத்தாது
தான் கொண்ட இலட்சியத்தை
முன்னிறுத்தித் துளியும்
தன்னலமில்லாமல்
இனநலம் போற்றும் என்
பேராற்றல் இணையன்!
உள்ளத்து உறுதி அகலாமல்,
உச்சிக் காலத்து நிழலென
ஒரு நொடி விலகாமல்,
கொண்டக் கொள்கையில்
அணுவளவும் பிறழாமல்
சிந்தை செழித்த இனியன்!
என்னுயிர் இளவல்
சே.பாக்கியராசனுக்கு
பேரன்புமிக்க பிறந்தநாள்
நல்வாழ்த்துகள்!
@PackiaSe



