முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ், தமிழர் எனும் பெருமிதத்திற்குரிய அடையாளங்களைச் சுமந்து, தமிழ்த்தேசியக் களத்தில்…

0

தமிழ், தமிழர் எனும் பெருமிதத்திற்குரிய அடையாளங்களைச் சுமந்து, தமிழ்த்தேசியக் களத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடாற்றிக் கொண்டிருக்கிற செயற்பாட்டாளன்!

தனது நெருப்புத்தமிழால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் கொட்டி முழக்கி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைக் கடைக்கோடிவரை கொண்டுபோய் சேர்க்கிற முதன்மைப் பரப்புரையாளன்!

ஆழ்ந்த வாசிப்பாற்றலாலும், தனது ஒப்பற்ற அறிவுக்கூர்மையாலும் கருத்தியல் தளத்திலும், அறிவுத்தளத்திலும் ஒருசேர மிளிர்கிற எழுத்தாளன்!

தனது தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களையும், இடர்களையும், துயர்களையும் சந்தித்தபோதிலும் இலக்கு நோக்கியப் பயணத்தில் நிதானித்து பயணிக்கிற தமிழ்த்தேசியன்!

நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் என் பாசத்திற்குரிய இளவல் புதுக்கோட்டை ஜெயசீலன் அவர்களுக்கு என்னுடைய பேரன்புமிக்க பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திபெருந்தலைவர் தாத்தா காமராசரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராகப்…
அடுத்த செய்திகரூரில் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது;நாம் தமிழர் உறவுகள்…