முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழிதான் என்பதை…

0

உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழிதான் என்பதை ஆய்வுகள் வழி சான்றுகளுடன் நிறுவிய பல்மொழி வித்தகர்..!

40க்கும் மேற்பட்ட மொழிகளின் வேர்ச்சொற்களை ஆய்வு செய்த மொழியியல் வல்லுநர்..

தனித்தமிழ் இதழாக வெளிவந்த தென்மொழி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அன்னைத் தமிழ் வளர்த்த பெருமகன்..

இந்தி திணிப்புக்கு எதிராகத் தீரத்துடன் களம் கண்ட மொழிப்போர் வீரர்..

அன்றைய ஆட்சியாளர்கள் தமிழர்களிடம் இருந்த தமிழ்ப்பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டு, தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் ஏமாற்றுவதைக் கண்டு வருந்தி, உலகத் தமிழ் கழகத்தினை உருவாக்கிய பெருந்தகை..

தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், தமிழர் மதம், தமிழ் வரலாறு, திருக்குறள் தமிழ் மரபுரை உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் படைத்தளித்த தமிழ் அறிஞர்…

வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி மீட்சிக்கும், வளர்ச்சிக்கும், அயராது பாடுபட்ட “தமிழ்ப் பெருங்காவலர்” “செந்தமிழ்ச் செல்வர்” மொழியியல் பேரறிஞர், நம்முடைய தாத்தா மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பெரும்புகழ் போற்றுவோம்..!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திவரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப்…