முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள்…

0

அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள் தனன்யா அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால்[Spinal Muscular Atrophy – SMA (Type 2)] பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு, முற்றிலும் குணமடைய தேவைப்படும் மருந்தின் விலை இந்திய மதிப்பில் சுமார்
9 கோடி ரூபாய். நடுத்தரக் குடும்பத்தைச்
சேர்ந்த ஹரிதாஸ் & துர்காதேவி இணையர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நோய் தீர்த்து உயிர்காக்கும் ஊசியை செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாக்க முடியும்.
சிறிய வயதில் கொடுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அன்புமகள் தனன்யாவிற்கு நடப்பு மார்ச் மாதத்திற்குள் மருந்தினை செலுத்திட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், விரைந்து 9 கோடி ரூபாய் திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை உள்ளது. பிஞ்சு குழந்தையின் உயிர் காத்திட மருத்துவ நிதியுதவிக்கான திரள் நிதி பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து அன்புமகள் தனன்யாவை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் மருந்தின் விலை எளிய மக்களால் செலுத்த முடியாத வகையில் 9 கோடி ரூபாய் என்ற அளவில் பெருந்தொகையாக இருப்பதை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவத்திற்கான முழு செலவையையும் ஏற்கும் சிறப்பு கொள்கை
முடிவை எடுக்க வேண்டும்.
தேவையற்ற இலவசங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கும் தமிழ்நாடு அரசு, ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் இத்தகைய இன்றியமையாத மருத்துவச் செலவினை ஏற்பதில் எவ்வித தயக்கமோ, காலதாமதமோ செய்திடாது விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

வங்கி கணக்கு விபரம்:-
Ac No: 8215828115
INDIAN BANK
Ac Name: H D DHANANYA
IFSC CODE: IDIB000M318
MICR CODE: 611019011
GPAY : 84380 04274
தொடர்புக்கு: 9789514174

முந்தைய செய்திராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் அக்ரம்கான்…
அடுத்த செய்திபெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த…