நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை மேற்கு மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஹெலின் அவர்களின் அக்கா சகோதரி சுஜிதா இன்பராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அக்காவை இழந்து வாடும் தம்பி ஹெலின் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி சுஜிதா இன்பராஜ் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



