முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும், காரைக்குடி தொகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த ஒப்பற்ற களத்தளபதியுமான ஆருயிர் தம்பி கா.பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

மண் மீதும், மக்கள் மீதும் அளப்பெரிய பற்றுகொண்டு, தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டு, இனமானப் பணியாற்றிய தம்பியின் மரணம் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி கா.பிரபாகரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சட்டமன்றத் தேர்தல் – 2026 தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் வழங்குதல் தொடர்பாக