முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன்…

0

ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!

தான் உயிரோடு இருந்த நாள்வரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி!

தாயகம் காக்க விடுதலை நெருப்பாய்
வெடித்துச் சிதறிய மாவீரன்
சுந்தரலிங்கனாரின்
இணையில்லா வீரத்தையும்,
ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில்
அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று
தாய்மண்ணைக் காப்போம் என்ற
உறுதியினை ஏற்போம்!

வீரமிகு நம் பாட்டனார் சுந்தரலிங்கம் குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

ஆவணி 23 | 08-09-2025

முந்தைய செய்திபுரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி…
அடுத்த செய்திஉலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும்…