நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்!
ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள்.
அறிவு விழியால் அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.
அறிவை விரிவாக்கி என்னை வளர்த்தெடுத்த என் ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன்!
நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன்!
ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!



