நாம் தமிழர் கட்சி – திருப்பரங்குன்றம் கட்சி மாவட்டத் தலைவர் செ.மருதமுத்து அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா சு.செல்வராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி செ.மருதமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சு.செல்வராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



