மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறை ஏவும் திமுக அரசின் பாசிசப் போக்கு! – சீமான் கண்டனம்

126

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

இக்கைதும், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 5 நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட வாய்ப்புள்ளது எனும் செய்தியும் தமிழ்நாடு அரசின் பாசிசப் போக்கினைக் காட்டுகிறது.

அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள்
அடுத்த செய்திவேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்