அறிவிப்பு: 24-05-2017 சி.பா. ஆதித்தனாரின் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | எழும்பூர்

172

அறிவிப்பு: 24-05-2017 ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனாரின் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | எழும்பூர் | நாம் தமிழர் கட்சி
======================================
நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களினுடைய 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 24-05-2017 புதன்கிழமை காலை 9 மணியளவில், சென்னை எழும்பூர் சாலையில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
044-43804084