முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)

4

க.எண்: 20260600210அ
நாள்: 25.06.2026

ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,
கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒருங்கிணைந்த கொங்கு மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற ஆனி 14ஆம் நாள் 28-06-2026 காலை 11 மணியளவில் பெருந்துறை அருணாச்சலக் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கொங்கு மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 27-06-2026 அன்று திட்டமிடப்பட்டிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் மாற்றம் செய்யப்பட்டு ஆனி 20ஆம் நாள் (04-07-2026) சனிக்கிழமை மாலை 05 மணியளவில் பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெறவிருக்கிறது.