தலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)

270

க.எண்: 2021010020

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார். கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு நடைபெறும் இடம் கலந்தாய்வில் பங்கேற்கும் மாவட்டங்கள்
26-01-2021

செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 03 மணி

கே.எம்.பி திருமண மண்டபம்,
கெளரி திரையரங்கு அருகில், ஐந்து சாலை
சேலம்
தருமபுரி, கிருஷ்ணகிரி,

சேலம், நாமக்கல், கரூர்

27-01-2021

புதன்கிழமை காலை 10 மணி

பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபம், சின்னியம்பாளையம், அவினாசி சாலை, கோயம்புத்தூர் கோயம்புத்தூர், ஈரோடு

திருப்பூர், நீலகிரி

அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான இக்கலந்தாய்வுக் கூட்டங்களில் மேலே அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 
அடுத்த செய்திவேதாரண்யம் தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு