சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 24-07-2020 வெள்ளிக்கிழமையன்று, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
24-07-2020
வெள்ளி |
காலை 10:30 மணியளவில் |
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்
(திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12.00 மணியளவில் | திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
(நத்தம், வேடசந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
||
பிற்பகல் 1.30 மணியளவில் | திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
(பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்