க.எண்: 2019070133
நாள்: 22.07.2019
சுற்றறிக்கை:
மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்)
இடம்:
அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி |
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், எதிர்வரும்
24-07-2019 புதன்கிழமை, காலை 1௦ மணி முதல் மாலை 05 மணி வரை, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டங்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தொகுதிவாரியாக நடைபெறவிருக்கிறது.
இதில் உட்கட்சிக் கட்டமைப்பை மறுசீராய்வு செய்வது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.
எனவே திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
ksenthil@naamtamilar.org