சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன் சீமான் பங்கெற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

29

ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்காக இராசபக்சே இனவெறிக் கும்பலுக்கு ஏதிராக மேற்கு நாடுகள் கொண்டுவந்த தீர்மானங்களை நீர்த்துப்போக வைக்கும் செயல்களில் இந்திய அரசு ஈடுபட்டது. இதன்மூலம் இராசபக்சே கும்பலைக் காப்பாற்ற இந்திய அரசு செய்த முயற்சிகளை கண்டுக்கும் வகையில் கடந்த காலத்தில்நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசையும் அதனுடன் கூட்டாக நின்ற தி.மு.க. உள்பட்ட கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்தனர்.

இந்திய அரசு தனது கடந்த கால தவறுகளை மீண்டும் இழைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. வரவிருக்கிற ஐ.நா. மனித உரிமை இணையக் கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்களை தானே முன்மொழிய வேண்டும்.

அ. இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் உலகத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆ.   2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் தமிழர்களின் ஒட்டுமொத்தமான கடும் கோபத்திற்கு இரையாக நேரும் என எச்சரிக்கிறோம்.

மேலே கண்ட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் 20.02.2014 அன்று சென்னை உட்பட அனைத்து மாவட்டத் தலைநகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன் சீமான் பங்கெற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.