ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு

239

செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 04-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளை (05-09-2021) நடைபெறவிருக்கிறது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிருதுநகர் பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க பெருவிழா
அடுத்த செய்திபாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை)