பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை)

40

செய்திக்குறிப்பு: பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 05-09-2021 காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமையேற்ற சீமான் அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படங்களுக்கு முன்பு நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திதிராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான்..! – சீமான் சீற்றம்