அம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான்

210

19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூர் குழந்தை இயேசு ஆலையம் அருகில் தமிழ்த்தேசியப் போராளி வ.கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கல்வெட்டுக்களைத் திறந்து வைத்து, வானளாவ உயர்ந்த கொடிக்கம்பங்களில் புலிக்கொடியேற்றிவைத்தார். உடன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், அம்பத்தூர் தொகுதிச்செயலாளர் க.பூபேசு உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி சார்பாக ரத்தப் பரிசோதனை முகாம்