செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விழுப்புரம், கோயம்புத்தூர் மண்டலக் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் 30-01-2021 சனிக்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது.
இன்று 01-02-2021 திங்கட்கிழமையன்று பிற்பகல் 03 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வேலூர், தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
30-01-2021 வேலூர் https://t.co/uvTWusKH5T#VellaporanVivasayi | #TNElections2021 pic.twitter.com/GZzF2vGzU1
— சீமான் (@SeemanOfficial) January 31, 2021
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084