மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]

826

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று சென்னை, போரூரிலுள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன மீட்சியுரை நிகழ்த்தினார்.

கொடியேற்றம்
https://www.youtube.com/watch?v=qIbcR7t7vrs
சுடரேற்றம்
https://www.youtube.com/watch?v=uMbazWmYfdU

இந்நிகழ்வில் மாநில ஆட்சிமொழிப் பாசறைச் செயலாளர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன், மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இளவஞ்சி, மருது மக்கள் இயக்கத்தலைவர் முத்துப்பாண்டி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக குருதிக்கொடைப் பாசறை சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் நாம் தமிழர் உறவுகள் பலர் குருதிக்கொடை வழங்கினர். மாலை 6.10 மணிக்கு மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பின்னர், மாவீரர்களுக்கு மலர் வணக்கமும், சுடர் வணக்கமும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டப் பின்னர், தமிழீழத்தேசியக் கொடியும், நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு, மாவீரர் நாள் உரைவீச்சு தொடங்கியது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், அன்புத்தென்னரசன், கதிர் இராஜேந்திரன், களஞ்சியம் சிவக்குமார், மாநிலச் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

புகைப்படங்கள்

https://drive.google.com/drive/folders/1Fm1gAukRrdYQy6yL05kPhyT-Gdj8UbVu?usp=sharing

[WRGF id=109863]

முந்தைய செய்திமேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு