நாள்: 24.07.2019
சுற்றறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களப்பணியாளர்கள் தங்குமிடம் – ஆம்பூர் தொகுதி | நாம் தமிழர் கட்சி | க.எண்: 2019070134
எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடர் பரப்புரை நடைபெற்றுவருகிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலைமை தேர்தல் குழுப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆம்பூர் தொகுதியில் களப்பணியாற்ற திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தங்குமிடம்: டி.பி.ஆர்.மகால், தொடர்புக்கு: ஆ.அயுப்கான், தொகுதித் தலைவர் +91-9840282419 |
பண பலம், அதிகார பலம், ஊடக பலம் இவையேதுமின்றி மாற்றத்தை விரும்பும் மக்களை நம்பி நிற்கும் நாம், நமது கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் சின்னத்தையும் அவர்களிடத்தே கொண்டுசேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
எனவே உறவுகள் ஒன்றுகூடி, வீடு வீடாக துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தல், சின்னம் மற்றும் வேட்பாளரின் கைப்பாதகைகள் ஏந்தி வீதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தல், வாகனப் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் போன்ற பலவழிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறோம்.
இப்பெரும்பணியில் நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தவறாமல் நேரிடையாக களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் அழைக்கிறோம். அவ்வாறு களப்பணியாற்ற ஆம்பூர் வருகைதரும் உறவுகளுக்கு தங்குமிடம், உணவு, குளியல் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுக்காக மேற்காணும் முகவரியில் உள்ள டி.பி.ஆர் மகாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் களப்பணியில் நேரிடையாக பங்கேற்க இயலாத உறவுகள் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை (துண்டறிக்கை, கைப்பதாகை, பொதுக்கூட்ட ஏற்பாடு, களப்பணியாளர்களுக்கான உணவு, நீர், மோர், தேநீர், தங்குமிடம், பரப்புரை வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட) தேர்தல் செலவுகளுக்கான நிதியாக வழங்கி களத்தில் நமது கட்சியை வலிமைப்படுத்துங்கள்.
வங்கி கணக்கு விவரம் :
கணக்கின் பெயர் (Account Name): நாம் தமிழர் கட்சி Naam Tamilar Katchi
வங்கி பெயர் (Bank Name) : Axis Bank
கணக்கு எண் (Acc No.): 916020049623804
Current Account
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095
UPI: 9092529250@upi
Online: https://www.naamtamilar.org/donate-us/
வங்கி கணக்கிற்குப் பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை thuli@naamtamilar.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
தொடர்புக்கு:
கா.சாரதிராஜா +91-9500767589 (தலைமை அலுவலக நிர்வாகி)
கு.செந்தில்குமார் +91-9600709263 (தலைமை நிலையச் செயலாளர்)
“துளித்துளியாய் இணைவோம் பெருங்கடலாகும் கனவோடு!”
– செந்தமிழன் சீமான்