சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்

23

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்

மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள்  (நா.சந்திரசேகரன், கா.கலைக்கோட்டுதயம், ச.சிவக்குமார், செ.வெற்றிக்குமரன், களஞ்சியம் சிவக்குமார், த.சா.இராஜேந்திரன், மு.இ.ஹுமாயூன் கபீர் மற்றும் இராம.கோட்டைக்குமார்) கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். மதுரை தென்  மண்டலத்திற்கான முதற்கட்டக் கலந்தாய்வு அட்டவணை,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு
நேரம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்
10-03-2019

ஞாயிற்றுக்கிழமை

காலை 10 மணி ஸ்டார் ரெசிடென்சி,

மதுரை

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் அனைத்து தொகுதிகளுக்கும்