தலைமைச் செய்திகள்

‘பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு’ அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்! – சீமான்...

ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில்...

இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள உமா குமரன் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது. இனவழிப்பு தந்த காயங்களோடும், கண்ணீரோடும் ஊரிழந்து, உறவிழந்து, உரிமையிழந்து, உயிர் சுமந்த...

அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டத்தையும், சனநாயகத்தையும் பாதுகாக்கப்...

துயர் பகிர்வு: ஹதராஸ் விபத்து

உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் இந்நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும் உற்ற நேரத்தில் உரிய மருத்துவமளித்து உயிர்காக்கும் உன்னதப்பணி புரிவதாலேயே மருத்துவர்களை, கண் முன்னே நடமாடும் கடவுளாக...

துயர் பகிர்வு: ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் செய்தித்தொடர்பாளர் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா வண்ணை கணேசன் அவர்கள், கள்ளச்சாராயப் படுகொலைகளைக் கண்டித்து திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி...

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024: வேட்பு மனு தாக்கல்!

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? – சீமான் கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்கள் விவரப் படிவம்

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்களை ஆதரித்து 20-06-2024 முதல் 08-07-2024 வரை...

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு சீமான் நன்றி!

நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆருயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கும், https://x.com/Seeman4TN/status/1799483540976837079 தமிழக...