முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – உலகப் பழங்குடியினர் நாள் விழா தமிழ்ப் பழங்குடிகளைக் காக்க தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

48

க.எண்: 2026080235
நாள்: 01.08.2026

உலகப் பழங்குடியினர் நாளையொட்டி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் உலகப் பழங்குடியினர் நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆடி 24ஆம் நாள் (09-08-2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெறவிருக்கிறது. உலகப் பழங்குடியினர் நாள் விழா
அன்னைத் தமிழ் நிலத்தை மீட்க, தமிழ்ப் பழங்குடிகளைக் காக்க தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
முன்னிலை:
கேப்டன் துரை, மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை
கண்டனவுரை:
கல்வியாளர் மு.இ.ஹீமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை வழக்கறிஞர் கரிகாலப் பாண்டியன், மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
நாள்: ஆடி 24 ஞாயிற்றுக்கிழமை | 09-08-2026 மாலை 04 மணிக்கு இடம்: தேனி-பெரியகுளம் (கே.எஸ்.கே. உணவகம் எதிரில்)
இப்பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தேனி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்