தலைமை அறிவிப்பு – தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா 2026

64

க.எண்: 2026010007
நாள்: 05.01.2026

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு,
நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற மார்கழி 26ஆம் நாள் (10-01-2026) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா 2026
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: மார்கழி 26 | 10-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
கட்சித் தலைமையகம்
(இராவணன் குடில்)
சென்னை வளசரவாக்கம்
இவ்விழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டமானது பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் அவர்களின் முன்னிலையில்