அறிவிப்பு: அடுத்தநிலைப் பேச்சாளர்களுக்கானப் பயிற்சி பட்டறை – பரிந்துரை பட்டியல் கோருதல் தொடர்பாக

578

க.எண்: 2023070312

நாள்: 19.07.2023

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் அடுத்தநிலைப் பாய்ச்சலின் ஓர் அங்கமாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அடுத்தநிலைப் பேச்சாளர்களைப் பட்டைத்தீட்டி உருவாக்கும் பணிகள் நடைபெறவிருக்கிறது.

மாநிலம் தழுவிய அளவில் அறியப்பட்டப் பேச்சாளர்களைத் தவிர, தொகுதிக்குக் குறைந்தபட்சம் இரண்டு பேச்சாளர்களின் பெயர்களைப் பரிந்துரைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, தொகுதிச் செயலாளர்கள் இதனை உடனடி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தொகுதியின் மற்றப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்ந்து, சூலை 30ஆம் தேதிக்குள் உங்கள் பரிந்துரைகளை ntkthamizhmeetchi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனுப்ப வேண்டிய செய்தி:

  • பேச்சாளர் பெயர்
  • தொகுதி
  • பேச்சாளரின் உறுப்பினர் எண்
  • பேச்சாளரின் தொடர்பு எண்
  • பரிந்துரை செய்யும் பொறுப்பாளர் பெயர் மற்றும் பொறுப்பு

மின்னஞ்சல் முகவரி: ntkthamizhmeetchi@gmail.com

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம் (மூன்றாம்கட்டம்) [திருத்தப்பட்டது 25-07-2023]
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு