க.எண்: 2023070307
நாள்: 18.07.2023
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்
(மூன்றாம்கட்டப் பயணத் திட்டம் 22-07-2023 முதல் 02-08-2023 வரை)
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் மூன்றாம்கட்டப் பயணத்திட்டம் பின்வருமாறு; (திருத்தப்பட்டது)
நாள் | நேரம் | நிகழ்வுகள் | தொகுதிகள் |
22-07-2023 | காலை 10 மணி |
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு -1
இடம்: எஸ். எஸ். மகால், குமணன்சாவடி, பூந்தமல்லி |
திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், பூந்தமல்லி, திருபெரும்புதூர், ஆலந்தூர் |
மாலை 05 மணி |
சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி!
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: மணவாளநகர் (மேம்பாலம் அருகில்), திருவள்ளூர் |
||
23-07-2023 | காலை 10 மணி |
திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு -2
இடம்: பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபம், செங்குன்றம் |
மாதவரம், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஆவடிஅம்பத்தூர் |
24-07-2023 | காலை 10 மணி |
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு
இடம்: உத்திரமேரூர் |
காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர்,மதுராந்தகம் |
மாலை 05 மணி |
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: தேரடி வீதி, மதுராந்தகம் |
||
25-07-2023 | காலை 10 மணி |
செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு
இடம்: ஜே.பி. பேலஸ், மறைமலைநகர் |
செங்கல்பட்டு,
திருப்போரூர் தாம்பரம், பல்லாவரம் |
26-07-2023 | காலை 10 மணி |
மதுரை மாவட்டக் கலந்தாய்வு – 1
இடம்: ஆகாஷ் கிளப், பரவை, மதுரை |
மதுரை மேற்கு,
மதுரை தெற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் |
28-07-2023 | காலை 10 மணி |
மதுரை மாவட்டக் கலந்தாய்வு – 2
இடம்: ஆகாஷ் கிளப் , பரவை, மதுரை |
மதுரை வடக்கு,
மதுரை நடுவண், திருமங்கலம், மதுரை கிழக்கு, மேலூர் |
31-07-2023 | காலை 10 மணி |
வடசென்னை மாவட்டக் கலந்தாய்வு 1
இடம்: எம்.கே.எஸ். மகால், |
திருவொற்றியூர்,
இரா.கி.நகர், இராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் |
01-08-2023 | காலை 10 மணி |
மத்தியசென்னை மாவட்டக்கலந்தாய்வு 2
இடம்: சுகுண விலாஸ் சபா (எஸ்.வி.எஸ் கிளப்) |
சேப்பாக்கம்
எழும்பூர் அண்ணாநகர் வில்லிவாக்கம் ஆயிரம் விளக்கு துறைமுகம் |
02-08-2023 | காலை 10 மணி |
தென்சென்னை மாவட்டக் கலந்தாய்வு 3
இடம்: கபாலி கல்யாண மண்டபம் 19, காந்தி சாலை, வேளச்சேரி, சென்னை-42 |
தி.நகர்
சைதாப்பேட்டை விருகம்பாக்கம் சோழிங்கநல்லூர் வேளச்சேரி மைலாப்பூர் |
மேற்காணும், கலந்தாய்வுகளில் பங்கேற்கும் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டம் மற்றும் தொகுதியின் கட்சிக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தங்கள் கருத்துகள் / கோரிக்கைகள் / மக்கள் பிரச்சினைகளை விரிவான மனுவாக தயாரித்து கொண்டுவந்து, கலந்தாய்வின் போது நேரில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இனி நடைபெறவிருக்கும் அனைத்துப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் தவறாமல் நடத்தப்படவேண்டுமெனவும், கூடும் மக்களிடத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான குறும்படிவம் கொடுத்து, அதனை நிரப்பச்செய்து, நிரப்பியப் படிவங்களைச் சேகரித்து, புதிய உறவுகளைக் கட்சியில் இணைக்க வேண்டுமெனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
எனவே, இச்செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி